நான் நுகர்ந்த பூக்களின் வாசத்தை எனது வரிகளில் நீ உணர முடிந்தால், அடுத்தவரி எழுத எனக்குத்தகுதி உண்டு.
நேற்றய தோல்விக்கும் நாளை என்ற கேள்விக்கும் இடையே எதுவாகவும் செய்யென களிமண் இயல்பிலேயே கனவுகானச் சென்றஇடம். ஐந்து வயது மனநிலைக்கு அடுத்தநொடி அழைத்துச்செல்லும். எல்லா பயணிக்கும், ஞானிக்கும் என்போலொரு புகைப்பட விரும்பிக்குமான கனவுதேசம். புலனுறக்கம் கலைக்கச்செயும் ‘சே – Che‘ போல் எனைவிடாது பற்றிக்கொள்ளும் ஒற்றைச்சொல் மந்திரம் ‘லே – Leh‘
பயணத்திற்கு முதல் நாள்வரை, எனது வருகையை உறுதிசெய்யாதபோதும் எங்கும் தனதருகில் துண்டுபோட்டுவைத்திருந்த தம்பி கார்த்திக்குடன் தலைநகர் டெல்லிநோக்கி பறக்கும் கனவுகளுடனேயே பறக்கத்தொடங்கினேன்.
Copyright Notice: The photographs contained on this story, are the property of Jothi Manikandan and are protected under copyright laws. All Photographs are copyrighted. No permission, either express or implied, is granted for the electronic transmission, storage, retrieval, or printing of the photographs. Express written permission must be granted, on behalf of the photographer (copyright holder, Jothi Manikandan), in order to use these photographs for any purpose.